’1989ல் ஜெயலலிதாவும் அரசியலைவிட்டு விலக முடிவு செய்தார்’’-பத்திரிகையாளர் தராசு ஷியாம்

’1989ல் ஜெயலலிதாவும் அரசியலைவிட்டு விலக முடிவு செய்தார்’’-பத்திரிகையாளர் தராசு ஷியாம்
’1989ல் ஜெயலலிதாவும் அரசியலைவிட்டு விலக முடிவு செய்தார்’’-பத்திரிகையாளர் தராசு ஷியாம்
Published on

சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், ‘’சசிகாலா தற்போது எடுத்துள்ள இதே முடிவை 1989-இல் ஜெயலலிதாவும் எடுத்தார். அரசியலிலிருந்து தான் விலகப்போவதாக கடிதம் எழுதினார். பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதினார். அதை நடராஜன் கைப்பற்றி வைத்திருந்தபோது, அதை கண்டுபிடிக்க போலீஸ் சோதனையும் நடைபெற்றது. இந்த முடிவுகள் எல்லாம் அவ்வப்போது மாறக்கூடியவை. ஒருவேளை திமுக வெற்றிபெற்றுவிட்டால் அந்த பழி தன்மீது வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் சசிகலாவுக்கு இருக்கலாம்.

தற்போது திமுக, அதிமுக கூட்டணிகள் வலுவாக இருக்கின்றன. ஒருவேளை அங்கு சலசலப்பு ஏற்பட்டால், சில கட்சிகள் சசிகலா இல்லாத அமமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வரலாம் என்பது அவருடைய எண்ணமாக இருக்கலாம்.

இயற்கைக்கு மாறான தேர்வுகளை உள்ளடக்கியதுதான் அரசியல். எப்படியிருந்தாலும் சசிகலாவின் இந்த முடிவு டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவருடைய பேட்டிகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை தேர்தலுக்கு பின்பு இந்த முடிவு மாறலாம். இது அதிமுகவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். மேலும் தேர்தல் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் சசிகலாவின் திட்டங்கள் தள்ளிப்போயிருக்கலாம்’’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com