சோடா பாட்டில் பேச்சு: மன்னிப்பு கோரினார் ஜீயர்..

சோடா பாட்டில் பேச்சு: மன்னிப்பு கோரினார் ஜீயர்..
சோடா பாட்டில் பேச்சு: மன்னிப்பு கோரினார் ஜீயர்..
Published on

சோடா பாட்டில் வீசுவோம் என்ற பேச்சுக்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டதாக சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், வைரமுத்து ஸ்ரீவில்லிப்புதூர் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கோரும் வரை அறவழிப்போராட்டம் தொடரும் எனவும், சாமியார்களால் என்ன செய்து விட முடியும் என நினைப்பவர்களுக்கு, எதற்கும் தாங்கள் துணிந்தவர்கள் என்பதை காட்டுவோம் எனவும் கூறினார். மேலும் “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். இருப்பினும், இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. அத்துடன் பல அரசியல் தலைவர்களும் ஜீயரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ஜீயர், “கடந்த 15 நாட்களாக எங்களுக்கு கடிதம் மூலமும், போன் மூலமும் எதிரான கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் நாங்கள் அப்படியில்லமால், அமைதியான முறையில் அறவழியில் போராடவே விரும்பினோம். நாங்கள் பேசிய அந்த ஒரு வார்த்தைக்காக (கல், சோடா பாட்டில் வீசுவது) ஆண்டாளிடம் மன்னிப்பு கோரியுள்ளோம். அத்துடன் ஜீயர் இப்படி பேசிய தவறு என எண்ணி வருத்தப்படும் இந்து மக்களுக்காகவும் ஆண்டாளிடம் மன்னிப்பு கோரியுள்ளோம்.” என்று கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com