ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு, தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அரசு மருத்துவர்கள் 7 பேர் உட்பட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலிதாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்த சங்கர், கைரேகை தொடர்பாக சந்தேகம் எழுப்பிய மதுரை மருத்துவர் சரவணன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், அவர் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்து வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.