ஜெயலலிதா மரணம்: 6 மாதம் அவகாசம் கோரும் நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம்: 6 மாதம் அவகாசம் கோரும் நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம்: 6 மாதம் அவகாசம் கோரும் நீதிபதி ஆறுமுகசாமி
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  உடல்நிலைக்குறைவு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து  உத்தரவிட்டது.

இந்நிலையில் விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் வரும் 25ஆம் தேதி முடியும் நிலையில், மேலும் 6 மாதம் அவகாசம் வழங்குமாறு பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், பிரமாணப் பத்திரங்களை அளித்த பலரிடம் இன்னும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி, இதுவரை திமுக மருத்துவ அணி துணை தலைவர் சரவணன், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com