வரி பாக்கி: ஜெயலலிதா, சசிகலாவின் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்

வரி பாக்கி: ஜெயலலிதா, சசிகலாவின் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்
வரி பாக்கி: ஜெயலலிதா, சசிகலாவின் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது.

2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் செப்டெம்பர் மாதத்தில் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலாவுக்கு சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்தனர். அதுமட்டுமல்லாமல் இதுவரை சுமார் 2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரி பாக்கி நிலுவையில் இருந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருக்கிறது. வருமான வரித்துறைக்கே வரி பாக்கி நிலுவையில் இருப்பதன்காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com