ஜெயக்குமாரின் கருத்தெல்லாம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல - கோவை செல்வராஜ்

ஜெயக்குமாரின் கருத்தெல்லாம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல - கோவை செல்வராஜ்
ஜெயக்குமாரின் கருத்தெல்லாம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல - கோவை செல்வராஜ்
Published on

இரட்டை தலைமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் ஒ.பன்னீர் செல்வத்தின் கருத்து என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

ஓபிஎஸை அவரது இல்லத்தில் சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர். கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் ஒற்றை தலைமையை எந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒ.பன்னீர்செல்வம் தான் கட்சியை வழி நடத்துவார். இயக்கத்தையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். இந்த இயக்கத்தை காப்பாற்றும் தகுதியும் பொறுப்பும் ஒ. பன்னீர் செல்வத்துக்கு மட்டும்தான் உள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 25 சதவீதம் பேர் தான் ஒற்றை தலைமை தொடர்பான கோரிக்கை வைத்தனர். இதையும் சிலர் சொல்லித்தான் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார் இல்லை, ஜெயக்குமாரின் சொந்தக் கருத்து அது.

ஒற்றை தலைமைக்கான ஆலோசனை எங்கும் நடைபெறவில்லை. ஒரு சிலரின் சுயநலம் ஆசைக்காக கூறுகின்றனர். இது அதிமுகவின் கருத்து அல்ல. உட்கட்சி விவகாரத்தை ஊடகத்தில் பேசிய ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒற்றை தலைமை என்ற வார்த்தைக்கே இடமில்லை. தனிப்பட்ட முறையில் யாருடைய கையும் ஓங்குவதற்கு தொண்டர்கள் தயாராக இல்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும், கட்சி வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள், மக்கள் எதிர்க் கட்சியாக நம்மைத்தான் நம்புகிறார்கள் என்று தான் ஓ. பன்னீர்செல்வம் நிர்வாகிகளிடம் பேசுகிறார் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com