தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு வன்முறை... 8-ஆம் தேதி விசாரணை தொடக்கம்
ஜல்லிக்கட்டு வன்முறை... 8-ஆம் தேதி விசாரணை தொடக்கம்
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை குறித்து ஒருநபர் விசாரணைக் குழு தனது விசாரணையை 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பான வன்முறைகள் குறித்து வருகிற 8-ஆம் தேதி தனது விசாரணையை நீதிபதி ராஜேஸ்வரன் தொடங்கவுள்ளார்.