“குழந்தைகளைப் பார்க்க மட்டும் அனுமதி வேண்டும்” - அமலாக்கத்துறை காவலில் ஜாபர் சாதிக் சகோதரர்

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகமது சலீம், ஜாபர் சாதிக்
முகமது சலீம், ஜாபர் சாதிக்pt web
Published on

செய்தியாளர்கள் - சுப்பையா, ஜெ.அன்பரசன்

தொடர் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர்

2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், முன்னாள் திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் கிடைத்தது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்pt web

இதனிடையே, வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்திய போது, சட்ட விரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். அவருக்கு நெருக்கமானோர் இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து அவரது நண்பர் அமீர், ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பேகம் மற்றும் தம்பி சலீம் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

முகமது சலீம், ஜாபர் சாதிக்
சவுக்கு சங்கர் மீது போடபட்ட குண்டர் சட்டம்.. தமிழ்நாடு அரசிற்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

சகோதரருக்கு நீதிமன்ற காவல்

குறிப்பாக, சலீமிடம் மூன்று முறை சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, ஜாபர் சாதிக் செய்யக்கூடிய தொழில் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவை குறித்து சலீமுக்கு தகவல் தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

#BREAKING | ஜாபர் சாதிக்கின் சகோதரர் கைது
#BREAKING | ஜாபர் சாதிக்கின் சகோதரர் கைது

விசாரணையில், ஜாபர் சாதிக்கின் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவரது சகோதரர் சலீமுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என கூறப்பட்டது. இதனை எடுத்து இரண்டு நாட்கள் விசாரணையின் முடிவின் அமலாக்கத்துறை அதிகாரிகள் சலீமை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, எந்தெந்த வகைகளில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சலீமுக்கு தொடர்புள்ளது என்பது குறித்து விசாரிக்க அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

முகமது சலீம், ஜாபர் சாதிக்
“தங்கலான் படத்தை வெளியிட தடையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

குழந்தையைக் காண அனுமதி

இதனை அடுத்து முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முகமது சலீமை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர்.

முகமது சலீம்
முகமது சலீம்

அப்போது, முகமது சலீமிடம், “அமலாக்கதுறை காவலில் உங்களை எடுக்க மனு தாக்கல் செய்துள்ளார்கள். இதற்கு ஏதேனும் ஆட்சேபணம் தெரிவிக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த முகமது சலீம், “எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நாளை எனது குழந்தையின் பிறந்தநாள் என்பதால் அவர்களை பார்க்க அனுமதி வழங்க வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.

இதையடுத்து முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, நாளை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அவரது குழந்தையை காண அனுமதிக்க அமலாகத்துறைக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com