ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்
ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்
Published on

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக எம் எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் அன்பழகனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு ஆரம்பத்தில் 90 சதவீத ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஆனால் அடுத்ததடுத்த நாட்களில் அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவையானது 40 சதவீதமாக குறைந்தது. இதனைத்தொடர்ந்து அவரின் உடலானது வெண்டிலேட்டர் உதவியில்லாமல் படிப்படியாகத் தேறி வந்தது.

இந்நிலையில் இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com