ஜெ. மரண வழக்கில் சசிகலாவுக்கு எதிரான சாட்சி விவரம் வேண்டும்: புதிய மனுத்தாக்கல்

ஜெ. மரண வழக்கில் சசிகலாவுக்கு எதிரான சாட்சி விவரம் வேண்டும்: புதிய மனுத்தாக்கல்
ஜெ. மரண வழக்கில் சசிகலாவுக்கு எதிரான சாட்சி விவரம் வேண்டும்: புதிய மனுத்தாக்கல்
Published on

ஜெயலலிதா மரண வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பினர் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 70 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016, டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்து தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பினர் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். 

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியது யார் என தெரிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பட்டியல் அளித்த பின் 15 நாளில் சசிகலா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com