ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி கடிதம் - பின்னணி என்ன?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
jayalalitha
jayalalithapt desk
Published on

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கர்நாடக மாநில நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

letter copy
letter copypt desk

இதைடுத்து வழக்கு முடிந்த நிலையில், ஜெயலலிதா சொத்துக்களை பொது ஏலம் விட வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கர்நாடக மாநில ஜெயலலிதா சொத்துக்கு வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதா சொத்துக்களை பொது ஏலத்தில் விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 03.07.2023 நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ மதிப்புள்ள தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள் பல வண்ண கற்கள் போன்றவை மட்டுமே நீதிமன்றம் வசம் இருப்பதாகவும் மீதமுள்ள பொருட்கள் எங்கு உள்ளது என தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

letter copy
letter copypt desk

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கூறியுள்ளார்.

அதன்படி, 11,344 விலையுயர்ந்த புடவைகள், 44 ஏசி இயந்திரங்கள், 131 சூட்கேஸ்கள், கடிகாரங்கள், சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த மற்றும் 700 கிலோ வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு வருகின்ற 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அன்றைய தினம் ஜெயலலிதா சொத்துக்களை பொதுஏலம் விடுவது குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com