சென்னை | ஆன்லைன் ரம்மியில் ரூ.60 லட்சம் வரை இழந்த ஐடி ஊழியர்.. விரக்தியில் விபரீத முடிவு!

ஐடி ஊழியர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மிfile image
Published on

சென்னை புரசைவாக்கத்தில், ஆன்லைன் ரம்மி, பிட்காயின் உள்ளிட்ட பலவற்றிலும் 60 லட்ச ரூபாய் வரை பணத்தை கடன் வாங்கி இழந்ததால் விரக்தியில் ஐடி ஊழியர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி
கடலூரில் இரு உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டம்!

ஆன்லைன் விளையாட்டில் 60 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்..

OMR பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் சரண்குமார்(32). திருமணம் ஆகாத நிலையில் சரண்குமார் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறப்பதற்கு முன்பு தனது தோழிக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

விசாரணையில் ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயின் உள்ளிட்ட பலவற்றிலும் 60 லட்ச ரூபாய் வரை கடன்வாங்கிய தொகையை இழந்ததால் விரக்தியில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

உடலை கைப்பற்றிய கீழ்ப்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைனில் ரம்மி விளையாடத் தடை: மீறினால் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com