திருத்தணி முருகன் கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருத்தணி முருகன் கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருத்தணி முருகன் கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை
Published on
திருத்தணி முருகன் கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். நாளை மறுநாள் ஆடி கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த திருத்தணி வந்த வண்ணமுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க இன்று முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை தெப்ப உற்சவ நிகழ்வுகள் அனைத்தும் பக்தர்கள் இன்றியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்வுகளும் கோயிலின் இணையதளத்திலும், யூடியூப் சேனலிலும் மாலை 5 மணிக்கு நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com