ஈஷா மஹாசிவராத்திரியை தடை செய்ய கோரிக்கை: நிராகரித்த பசுமை தீர்ப்பாயம்

ஈஷா மஹாசிவராத்திரியை தடை செய்ய கோரிக்கை: நிராகரித்த பசுமை தீர்ப்பாயம்
ஈஷா மஹாசிவராத்திரியை தடை செய்ய கோரிக்கை: நிராகரித்த பசுமை தீர்ப்பாயம்
Published on

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது

கோவையில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் வருடம்தோறும் மஹாசிவராத்திரி விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வெளிநாட்டு இசைக்கலைஞர்களின் இசை, நடனம் மட்டுமல்லாது ஆன்மீக நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேறும். 

ஈஷா சார்பில் நடத்தப்படும் இந்த விழாவின் போது ஒளி, ஒலி மாசு ஏற்படுவதால் அந்த விழாவிற்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் குழு சார்பில் பசுமைதீர்ப்பாயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மனு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த பசுமை தீர்ப்பாயம் “ வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதிகள் பெற்று கொண்டு மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என்றும் அனுமதி வழங்கும் போது அங்கு ஒலி, ஒளி மாசுபடாத வகையில் நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

மேலும் அந்த நிபந்தனைகள் சரிவர பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவேண்டும் என்றும் அந்த நிபந்தனைகள் மீறப்படும் போது அது குறித்தான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com