அமமுகவில் இருந்து விலகல்?: நாளை முடிவை அறிவிப்பேன் என இசக்கி சுப்பையா தகவல்!

அமமுகவில் இருந்து விலகல்?: நாளை முடிவை அறிவிப்பேன் என இசக்கி சுப்பையா தகவல்!
அமமுகவில் இருந்து விலகல்?: நாளை முடிவை அறிவிப்பேன் என இசக்கி சுப்பையா தகவல்!
Published on

மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சியாக உருவான அமமுக மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பலவீனமாகி வருகிறது. அமமுகவின் முக்கிய நிர்வாகிகளான செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன் ஆகியோர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கி இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2011இல் ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்து பணியாற்றியவர் இசக்கி சுப்பையா. பின்னர் தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்துகொண்டார். கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்துள்ளார் இசக்கி சுப்பையா. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தினகரனுக்கும் இசக்கி சுப்பையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கட்சியில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய இசக்கி சுப்பையா, நாளை காலை செய்தியாளர்களை சந்தித்து அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன்  என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அசோக் நகரில் உள்ள அமமுகவின் கட்சி அலுவலகம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com