கேள்விதாள் மாற்றி கொடுக்கப்பட்டதா? சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடியா? - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

தமிழகம் முழுவதும் நடந்த சிவில் நீதிபதி டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தயாரித்துக் கொடுத்த வினாத்தாள்கள் தான் தேர்வுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
TNPSC
TNPSCFile Photo
Published on

இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிவில் நீதிபதி TNPSC தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வட சென்னையில் இன்று மதியம் நடைபெற வேண்டிய கேள்வித்தாள் காலையிலேயே பல்வேறு தேர்வு மையங்களில் கொடுத்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC exam
TNPSC exampt desk

இதற்கு விளக்கம் அளித்துள்ள TNPSC நீதிபதி பணிக்கான தேர்வில் குளறுபடி ஏற்படவில்லை. உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தான் நீதிபதிகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய சட்டம் இரண்டாம் தாள் வினாத்தாளில் சட்டம் மூன்றாம் தாளில் உள்ள கேள்விகள் கேட்கப்பட்டதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றம் தயாரித்துக் கொடுத்த வினாத்தாள்கள் தான் தேர்வுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் தேர்வர்களின் புகார் குறித்து தெரிவிக்கப்பட்டது. வினாத்தாளில் குளறுபடிகள் இல்லை. தேர்வை தொடர்ந்து நடத்தலாம் என உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதி பணிக்கான தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று விளக்கமளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com