இடம் மாறுகிறதா தலைமைச் செயலகம்?

இடம் மாறுகிறதா தலைமைச் செயலகம்?
இடம் மாறுகிறதா தலைமைச் செயலகம்?
Published on

சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில், மருத்துவமனை திறப்பு குறித்த ஜெயலலிதா பெயர் கொண்ட கல்வெட்டுடன், புதிய தலைமைச் செயலகம் என்ற கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக கருணாநிதி பதவி வகித்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டு ஓமந்தூரார் பகுதியில் புதிய தலைமைச் செயலக அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார். இதைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்த புதிய தலைமைச் செயலக கல்வெட்டும் அகற்றப்பட்டது. இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா பெயர்கொண்ட கல்வெட்டுடன், அந்த இடத்தில், புதிய தலைமைச் செயலக கட்டடம் என்ற கல்வெட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயர் கொண்ட கல்வெட்டு, நான்கு அடி இடைவெளியில் சற்று தள்ளி பதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com