இது என்ன திருமண சேவை மையமா? : ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி குவியும் காதல் ஜோடிகள்!

இது என்ன திருமண சேவை மையமா? : ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி குவியும் காதல் ஜோடிகள்!
இது என்ன திருமண சேவை மையமா? : ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி குவியும் காதல் ஜோடிகள்!
Published on

ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடி தஞ்சமடைந்து வருகிறது. இன்று மதியம் வந்த காதல் ஜோடியின் பெற்றோரை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என இரண்டு காவல் நிலையங்களும் ஒரே வளாகத்தில் செயல்பட்டி வருகிறது. அங்கு, கடந்த ஒரு வாரமாக பத்துக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள், வீட்டைவிட்டு ஓடிவந்து காதல் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில், இன்று மதியம் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒரு காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் மோகனபிரியா, திண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் கோகுல்ராஜ் என தெரிய வந்திருக்கிறது.

மோகனப்பிரியா சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை அறிவியல் படித்து வருகிறார். கோகுல்ராஜ் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வழியில் சென்றுவரும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்று நாமக்கல் அருகேயுள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

ALSO READ: 

பின்னர், மகளை காணவில்லை என்று மகேந்திரன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் இன்று மதியம் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரின் பெற்றோர்களையும் அழைத்துபேசி, சமாதானம் செய்து வந்தனர். பின்னர் காதல் ஜோடியை கோகுல்ராஜ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஓமலூரில் உள்ள இரண்டு காவல் நிலையங்களிலும் தினமும் திருமணம் செய்துகொண்டு காதல் ஜோடி வருவதால், காவல் நிலையம் திருமணம் மையம் போலவே காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com