மயங்கி விழுந்து உயிரிழந்த முன்கள பணியாளர் - இறப்புக்கு காரணம் கொரோனா தடுப்பு ஊசி என புகார்

மயங்கி விழுந்து உயிரிழந்த முன்கள பணியாளர் - இறப்புக்கு காரணம் கொரோனா தடுப்பு ஊசி என புகார்
மயங்கி விழுந்து உயிரிழந்த முன்கள பணியாளர் - இறப்புக்கு காரணம் கொரோனா தடுப்பு ஊசி என புகார்
Published on

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று வலிப்பு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த தற்காலிக முன்கள பணியாளர். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதால் தான் இறந்திருக்கிறார் என உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே சின்னமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மனோகரன். இவர் புதூர் பேரூராட்சியில் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனோகரன் வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தார். மனோகரின் உடலை கைபற்றிய காவல்துறையினர் யார் எந்த ஊர் என விசாரித்து உறவினர்க்கு தகவல் தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து உறவினர்கள் வந்து விசாரித்த போது வலிப்பு வந்த நிலையில் இறந்தாத தெரிவித்தனர். ஆனால், உறவினர்கள் அவருக்கு கொரேனா தடுப்பு ஊசி போட்டதால் தான் இறந்துள்ளார் எனக்கூறி முறையிட்டனர். மனோகரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மனோகரன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உடல் சோர்வு ஏற்பட்டு உயிரிழந்தார் எனக்கூறி மனோகரனின் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி அம்பிகா மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மனோகரனின் உடலை தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவ குழு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவுசெய்ய வேண்டுமெனவும் காவல்துறையிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மனோகரன் கடந்த 21.12.2020 அன்று புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தடுப்பூசி போட்டதிலிருந்தே மனோகரன் அடிக்கடி வாந்தி எடுத்து உடல் சோர்வுடன் இருந்ததாகவும் தடுப்பூசி வேண்டாம் என கூறியும் வலுக்கட்டாயமாக தடுப்பு ஊசி போட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மனோகரனுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தடுப்பு மருந்தால் மனோகரன் உயிரிழந்ததால் மாநில சுகாதாரத்துறை செயலாளர் உரிய ஆய்வு செய்து வறுமையில் வாடும் மனோகரனின் குடும்பத்திற்கு அரசுப் பணியும் உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்ய முற்பட்டபோது எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரையில் உடலை வாங்க போவதில்லை என திட்டவட்டமாக கூறியதால் மனோகரனின் உடல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊசி போட்டதால் இறந்தார அல்லது வலிப்பு வந்து இறந்தார என உடற்கூறு ஆய்விற்காக காவல்துறையினர் மற்றும் உறவினர் மருத்துவமனையிலே காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com