2030-ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம் என்பதை இலக்காக கொண்டு இன்று சென்னையில் துவங்கப்பட்ட 3 ஆவது ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’-ல் பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டன. இன்றும் நாளையும் இம்மாநாடு நடக்க உள்ளது.
அந்தவகையில் 50-க்கும் அதிக நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனத் தலைவர்களும் 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ஹீண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்கவும் அதனை விரிவுபடுத்தவும் மூதலீடுகளை வழங்கியுள்ளனர். இவையாவும் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பாதையாக பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்ட முக்கிய நிறுவனங்களின் பெயர் மற்றும் அவை முதலீடுகளின் விவரங்கள் இதோ...
நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் தொடங்கப்படவுள்ளது. முதலீடு ரூ 1,000 கோடி. இதன் மூலம் 8000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
டாடா எலக்ட்ரானிக்ஸ், செல்போன் உற்பத்தி மையம் கிருஷ்ணகிரியில் நிறுவப்பட உள்ளது. முதலீடு ரூ 12,082 கோடி. இதன் மூலம் 40,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
கோத்ரெஜ் நுகர்வோர்:
முதலீடு ரூ 515 கோடி. இதன் மூலம் 446 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
JSW Energy (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்)
முதலீடு ரூ 10,000 கோடி. இதன் மூலம் வேலை 6,600 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
வின்ஃபாஸ்ட்:
வின்ஃபாஸ்ட் சார்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனங்கள் உற்பத்தில் மையம் நிறுவப்பட உள்ளது. முதலீடு ரூ 16,000 கோடி.
ஹூண்டாய் மோட்டார்ஸ், காஞ்சிபுரத்தில் மின்சார கார், மின்கலன்கல் உற்பத்தி நிறுவனம். முதலீடு ரூ 6,180 கோடி.
மிட்சுபிஷி எலெக்ட்ரிக், குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதலீடு ரூ 200 கோடி. இதன் மூலம் பேர் 50 வேலை வாய்ப்பு பெறுவர்.
குவால்காம், சென்னை வடிவமைப்பு மையம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதலீடு ரூ 177.27 கோடி. இதன் மூலம் பேர்1600 வேலை வாய்ப்பு பெறுவர்.
டிவிஎஸ் குழுக்கள்,தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவுள்ளது. முதலீடு ரூ 5,000கோடி. இதன் மூலம் பேர் 500 வேலை வாய்ப்பு பெறுவர்.
ஏபி மோலெர் மேர்ஸ்க்:
ஏபி மோலெர் மேர்ஸ்க் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தீர்வுகள் சார்பில் தமிழகம் முழுவதும் சர்வதேச திறன் மையங்கள் நிறுவப்படவுள்ளது.