”மீண்டும் அதே வீரியத்துடன் செயல்படுவேன்”-ஜாமீனில் வெளிவந்த பின்பு சவுக்கு சங்கர் பேட்டி - முழுவிபரம்

மதுரை மத்திய சிறையில் இருந்து யூடியுபர் சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்எக்ஸ் தளம்
Published on

மதுரை மத்திய சிறையில் இருந்து யூடியுபர் சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார். அப்போது அங்குவந்த பாஜகவினர் சிலர், அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சவுக்கு சங்கர், “எனக்கு 3 இடங்களில் எலும்புகள் உடைத்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் காவல் துறையினர் என்னை கஸ்டடி எடுக்கும்போதும் திமுக அரசிற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது; திமுக அரசுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என நிபந்தனையாகக் கூறினார்கள். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் உடனடியாக உங்களை விடுவிப்போம். அதை மீறினால், நாங்கள் ஒவ்வொரு வருடத்திற்கு உங்களைச் சிறையிலிருந்து விடமாட்டோம் என கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்pt web

நான் உண்மைகளைப் பேசுவதிலிருந்து அஞ்ச மாட்டேன் என பதில் அளித்தேன். அதன் காரணமாக, இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின்கீழ் என்னைக் கைது செய்தார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களைச் சந்தித்தவர் அல்ல; விமர்சனங்களைப் பார்த்து பழகியவரோ, வளர்ந்தவரோ அல்ல; தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடிதான் மு.க.ஸ்டாலின். பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறந்தால், கருணையின் அடிப்படையில் பதவி வழங்குவார்கள். அதுபோலத்தான் திமுக தலைவரும் தற்போது முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறார். உண்மையை, சவுக்கு மீடியா 8 மாதங்களாக வெளிக்கொண்டுவந்தததன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு அலுவலகம் சீலிடப்பட்டது. வீடுகளும் சீலிடப்பட்டுள்ளன. எனது தாயாரின் பென்ஷனும் முடக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: லெபனான் ஊடகவியலாளர் வீட்டில் பாய்ந்த இஸ்ரேலிய ஏவுகணை.. நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோதே தாக்குதல்!

சவுக்கு சங்கர்
“குண்டர் சட்டம் ரத்து..” உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்.. சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!

நாட்டில் நடக்கும் எந்தவித உண்மையும் வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக முதல்வரும் உதயநிதி ஸ்டாலினும் மிக கவனமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மாற்ற வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. ’தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கருதப்படுகிறது. அதைத் தடுக்க வேண்டும். அதைத் தடுக்கவில்லை என்றால், மரக்காணத்தில் ஏற்பட்டதைப் போன்று மீண்டும் நடைபெறும்’ என தமிழக உள்துறை அமைச்சருக்கு சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு டிசம்பரில் கடிதம் எழுதி இருக்கிறார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் புதிய தலைமுறை

இந்தக் கடிதத்தின்மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால், 66 உயிர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போயிருக்காது. இதுபோன்ற உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சவுக்கு மீடியா முடக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக சட்ட-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பாஸ்போர்ட் வழக்கு குறித்து பத்திரிகையாளர் எழுதியதற்கு அவரை கைது செய்துள்ளனர். சவுக்கு மீடியாவில் பணியாற்றிய நபர்கள்மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்படும் என மிரட்டி இருக்கிறார்கள். இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்கக்கூடாது. ஊடகச் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாகத்தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிக்க: மீண்டும் பணி அழுத்த மரணம்| லக்னோ வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பரிதாப உயிரிழப்பு - எழும் கேள்விகள்!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் மீது குண்டர்சட்டம்.. “கேவலமான அரசியல் பழிவாங்கல்; தவெக மாநாடு...” - சீமான்

ஐந்து மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்-கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் நம்பி இருந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இருந்த வீரியத்தைப் போன்று மீண்டும் செயல்படுவேன். மக்களுக்கு எடுத்துரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சவுக்கு மீடியா தயங்காது. எனது கையை, கோவை சிறையில் வைத்து உடைத்தார்கள். தமிழகத்தில் பத்திரிகைச் சுதந்திரம் என்பது துளியும் இல்லை. தமிழக முதல்வராக இருந்த கலைஞர், தன்னை பத்திரிகையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர் சுதந்திரத்தையும் குரல்வளையையும் நெருக்குவது மற்றும் நிறுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்.

தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாமல் ஒரு அவல நிலை உள்ளது. தமிழகத்தைப் பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாபக்கேடு மக்கள் எப்போது முடியும் என காத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின், சவுக்கு சங்கர்
மு.க.ஸ்டாலின், சவுக்கு சங்கர்puthiya thalaimurai

சவுக்கு சங்கர் கைது ஏன்? நடந்தது என்ன?

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். அவர்மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனிடையே கஞ்சா வைத்து இருந்ததாகவும் அவர்மீது மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின்கீழ் இரண்டாவது முறையாக தேனி காவல்துறையினர் கைது செய்தனர். இதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார், உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப்பெறுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவர்மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று (செப்.25) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: தென்கொரியாவில் ’இனவெறி’| இந்திய யூடியூபர் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்.. பற்றி எரியும் இணையம்!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் மீது போடபட்ட குண்டர் சட்டம்.. தமிழ்நாடு அரசிற்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com