சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?

சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
Published on

மதுரையை சேர்ந்த புகைப்படக் கலைஞர், நெதர்லாந்தில் நடைபெற்ற விழாவில் WORLD PRESS PHOTO விருதை பெற்றுக்கொண்டார்.

வேர்ல்ட் பிரஸ் போட்டோ' அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான பத்திரிகை புகைப்பட கலைஞர் விருதுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

இதில் உலக அளவில் ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பியா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஓசேனியா ஆகிய 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒற்றையர் (சிங்கிள்), கதைகள், நீண்ட கால திட்டங்கள் மற்றும் திறந்த வடிவம். செய்தித் தருணங்கள், நிகழ்வுகள் மற்றும் பின்விளைவுகள், அத்துடன் சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் அல்லது தீர்வுகளை ஆவணப்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் அடிப்படையில் புகைப்பட விருதுக்கான தேர்வு நடைபெற்றறது.

இந்நிலையில் 130 நாடுகளைச் சேர்ந்த 4,800 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற இதில், மதுரையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரன் நீண்ட கால திட்டங்கள் என்ற பிரிவின் கீழ் பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்திற்காக பதிவு செய்திருந்தார். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற WORLD PRESS PHOTO விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து WORLD PRESS PHOTO AWARD ஐ நெதர்லாந்த்தில் உள்ள ஆம்ஸ்டர்டேம் என்ற இடத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் புகைப்படக்கலைஞர் செந்தில்குமரனுக்கு WORLD PRESS PHOTO அறக்கட்டளையினர் அவருக்கு விருது வழங்கி கௌரவித்தனர். முன்னதாக பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்கள் முன் செந்தில்குமரனின் புலிகள் மற்றும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

உலக அளவில் நடைபெறும் இந்த போட்டியில் பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருதை தென்னிந்தியர் ஒருவர் பெற்றது இதுவே முதல் முறையாகும். ஆஸ்கருக்கு நிகரான WORLD PRESS PHOTO விருதினை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள செந்தில்குமரனுக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com