‘சாரிப்பா... கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகிட்டேன்’ மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற மணமகனின் தாயார்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற திருமண விழாவில் நடந்த சம்பவம் அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தியது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற திருமண விழாவில் நடந்த சம்பவம் அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தியது. சென்னையில், 48 ஏழை, எளிய இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், மணமகனின் தாயாரிடம் தாலியைக் கொடுத்து, அவரது மகனிடம் கொடுக்குமாறு சொன்னார். ஆனால், அந்த பெண் நொடிப் பொழுதில் தாமே மணமகளின் கழுத்தில் தாலியை கட்டச் சென்றார். இதனால் உதயநிதி அதிர்ச்சி அடைய, மணமகனும் அதிர்ச்சியில் உறைந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com