கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்களின் உடல்களை தானே முன் நின்று இறுதி சடங்குகளை செய்ய தயாராக இருப்பதாக பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் சில மருத்துவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஒரு மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக இருப்பவர் காஞ்சனா. இவர் கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்களின் உடல்களை தானே முன் நின்று இறுதி சடங்குகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொரோனாவால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்து அவரது சடலத்தை எரிக்கவிடாமல் தடுத்த சம்பவம் தமக்கு வருத்தம் அளிப்பதாகவும், இதுபோன்ற சம்பவம் இனி நடைபெற கூடாது என்றும், இனிமேல் அது போன்ற நிகழ்வு நடந்தால், அதிகாரிகள் அனுமதி கொடுத்தால் இறுதி சடங்கை தாமே முன்னின்று நடத்துவேன் எனவும் காஞ்சனா தெரிவித்துள்ளார்.