"வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும்"-டிஜிபி திரிபாதி

"வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும்"-டிஜிபி திரிபாதி
"வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும்"-டிஜிபி திரிபாதி
Published on

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் காவல்துறை அதிகாரிகள் தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர், ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் எல்இடி திரையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தினமும் 5 முறையாவது காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அப்போது ஸ்டிராங் ரூம் அறை பூட்டின் சீல் சேதம் அடையாமல் இருக்கிறதா, கண்காணிப்பு கேமரா காட்சிகள் சரியாக உள்ளனவா, பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் தங்கள் பணியை சரியாக செய்கிறார்களா என்பன உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com