திருச்சுழி அருகே மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருச்சுழி அருகே பரளச்சியைச் சேர்ந்த பாபு, ஜான் மருது ஆகியோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர் ஆகியோர் பரளச்சி சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் இரண்டு பழமையான துண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.
இக்கல்வெட்டை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் உதவியுடன்படி எடுத்து ஆய்வு செய்தனர். இவ்வாய்வில் இரண்டு கல்வெட்டுகளும் 700 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது.