வந்தது ஐ.என்.எஸ். சென்னை

வந்தது ஐ.என்.எஸ். சென்னை
வந்தது ஐ.என்.எஸ். சென்னை
Published on

இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பலான, ‘ஐ.என்.எஸ் சென்னை’ மும்பையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது.

இந்த கப்பல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மேற்கு கடற்படை கட்டுப்பாட்டில் இக்கப்பல் இயங்குகிறது. உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட இக்கப்பல், 163 மீட்டர் நீளமும், 7500 டன் எடையும் கொண்டது. அதிநவீன கப்பலில் தரை இலக்கை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் மற்றும் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் பராக் 8 ஆகிய இரண்டு ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர 2ஹெலிகாப்டர்களும் கப்பலில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

எதிரிகள் நீர் மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தினாலும், அதை அழிக்கும் திறன் கொண்டது. இந்த கப்பலின் சின்னத்தில் நீலநிறக்கடலும், பின்னணியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் இடம்பெற்றுள்ளன.

சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இந்த போர் கப்பல் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இன்று முதல் 18 ஆம் தேதி வரை சென்னையில் இருக்கும் இந்த கப்பலை பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பார்வையிடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com