தமிழக தொழில்துறை அமைச்சர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார். அதே போல தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையையும் அரசு முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொழில்துறையினர் மற்றும் வணிகர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினரின் ஒத்துழைப்பு அவசியம். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வரும் 11ஆம் தேதி 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.