கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் தற்போது படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் புதுவை மாநிலத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என இங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் தனிமனித இடைவெளியை காற்றில் பறந்தது.
மூன்றாவது அலைக்கு வாய்ப்புள்ளது என தொடர்ந்து எச்சரித்து வரும் வேளையில் இதுபோல் கூட்டம் கூடுவது கவலையளிப்பதாக சுகாதாரத்துறை துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். அதே சமயத்தில் அதிக அளவு மீன் வரத்து இல்லாத காரணத்தினால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனாலும் தனிமனித இடைவெளியை மறந்து மீன் வாங்க அலைமோதிய கூட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.