கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 64 இந்திய ராணுவ வீரர்களுக்கு 14 நாள் ஹதயோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈஷா யோகா மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விதமான சக்திவாய்ந்த பாரம்பரிய யோகா பயிற்சிகளை அறிவியல்பூர்வமாக கற்றுகொடுத்து வருகிறது. இதன்மூலம், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.
Read Also -> சிலைக்கடத்தல் பிரிவுக்கு அதிகாரி நியமனம் !
அதன் ஒருபகுதியாக, இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஈஷா யோகா மையம் சார்பில் ஹதயோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதன்படி, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள்,உட்பட 64 வீரர்களுக்கு கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த நவம்பர் ஆம் 15 ம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரை 14 நாள்கள் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்கமர்த்தனா, சூர்யா க்ரியா, உப யோகா, அம் மந்திர உச்சாடனை, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புகளை அவர்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ரீதியான பல்வேறு சவால்களை எளிதில் எதிர்கொள்ள முடியும் .இதில் சில வீரர்களுக்கு, ஹதயோகா பயிற்சியாளர் ஆவதற்கான பிரத்யேக பயிற்சியும் வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு பிஎஸ்எஃப் பெண்கள் உட்பட எல்லைப் பாதுகாப்பு படை குழுவினர் இதேபோல் ஈஷா யோகா மையத்துக்கு வந்து ஹதயோகா பயிற்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .