தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக பல முக்கிய அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு, பவானி சாகர், பரம்பிக்குளம், மேட்டூர் உள்ளிட்ட 15 அணைகளின் மொத்த கொள்ளளவு 198 டிஎம்சியாக உள்ளது. பெரும்பாலான அணைகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், தென்மேற்குப் பருவமழை காலங்களில், நீர்வரத்து அதிக அளவில் கிடைத்துவருகிறது.
கர்நாடக அணைகளில் திறக்கப்படும் நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைத்துவருகிறது. பருவ மழை பெய்துவருவதால், அணைகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையில் 25.7 டிஎம்சியாக இருந்தது. தற்போது 30.2 டிஎம்சியாக உள்ளது.
அமராவதி அணையில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 2.72 டிஎம்சி. தற்போது 3.85 டிஎம்சியாக உள்ளது. அதேபோல வைகை அணையில் கடந்த ஆண்டு 3.19 டிஎம்சி. தற்போது 4.19 டிஎம்சியாக உள்ளது. கோவை சோலையாறு, ஆழியாறு, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலும் கடந்த ஆண்டைவிட அதிகளவில் நீர் இருப்பு உள்ளது.
ஆனால் மேட்டூர், முல்லைப்பெரியாறு, பாபநாசம், திருமூர்த்தி அணைகளில் கடந்த ஆண்டைவிட நீர் இருப்பு குறைவாக உள்ளது.