3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு

3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு
3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு
Published on

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் வாங்க ஏதுவாக, கடை இயங்கும் நேரத்துக்கு நாளை மட்டும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் 3 மாநகராட்சிகளிலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய 4 நாள் முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com