முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையிலிருந்து ஓரிரு நாட்களில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். மேலும் மோட்டார் சைக்கிள் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணியும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு டெல்டா பகுதிகளில் கடைமடை பகுதிவரை தூர்வாரப்படவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றுவிட்டதாக அதிகாரிகளும், விவசாயிகளும் தெரிவித்ததாகக் கூறினார். மேலும், ஆலை நிர்வாகத்துடன் பேசி கூடிய விரைவில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.