தொடர் கனமழையால் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கான தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

தொடர் கனமழையால் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கான தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
தொடர் கனமழையால் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கான தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கான தண்ணீர் திறப்பு 13,900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கே.ஆர்.எஸ் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு தொடர்ந்து 13,900 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையின் உயரம் 124.80 அடியாக இருக்கையில், நீர் இருப்பும் 124.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 11,062 கன அடியாக உள்ளது. அணை நிரம்பிய நிலையிலும் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 13,200 கன அடியாக உள்ளது.

இதேபோல் கபினி அணையின் உயரம் 84 அடியில் நீர் இருப்பு 83.94 அடி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,861 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 700 கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று காலை உபரி நீர் வெளியேற்றத்தின் அளவு 9,100 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை உபரி நீர் வெளியேற்றத்தின் அளவு 13,900 கனஅடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ம.ஜெகன்நாத்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com