சென்னை பள்ளிக்கரணையில் வருமான வரித்துறை சோதனை - ரூ.2.85 கோடி பறிமுதல்!

சென்னை பள்ளிக்கரணையில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.85 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை
வருமான வரித்துறைpt web
Published on

செய்தியாளர் - சாந்தகுமார்

தகவலின் அடிப்படையில் சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேடியல் சாலையில் பி.எல்.ஆர்.புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி மணல் விற்பனை செய்யும் இடத்தில் இன்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் 65 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பல்லாவரத்தை சேர்ந்த லிங்ஜராஜ் என்பவருக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.

அலுவலகம் மட்டுமன்றி லிங்கராஜ் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பல்லாவரம், பெருமாள் நகர் வீட்டில் நடத்திய அந்த சோதனையில் 2.20 கோடி ரூபாய் என மொத்தம் 2.85 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

வருமான வரித்துறை
மக்களவைத் தேர்தல் 2024: "அடிப்படை வசதி எதுவும் செய்து தரல"-வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருநீர்மலையில் இவருக்கு சொந்தமான கிரஷரிலும் சோதனை மேற்கொள்ளபட்டது. இவர் அதிமுகவை சேர்ந்தவர் உறுப்பினராக மட்டும் இருப்பதாக தகவல். பறிமுதல் செய்த பணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எதற்காக இந்த பணம் வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்தெல்லாம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்தான தகவல்கள் அடுத்தடுத்த கட்ட விசாரணைகளில் தெரியவரும் என கூறப்படுகிறது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com