கேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்

கேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்
கேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்
Published on

தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான உதயம்குளம்கரை பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க இந்த ஆலயத்தின் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களுக்குச் சென்று, அந்தக் கோயில்களின் மாதிரியைக் கொண்டு பணிகளை துவங்கினார்.

இப்போது 80% பணிகள் நிறைவேறியுள்ள நிலையில் உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகியுள்ளது. தற்போது இந்தியா புக் ஆஃப் ரெக்காட்டில் இடம் பிடித்துள்ள இந்தச் சிவலிங்கம் பத்து கோடி மதிப்பில் 111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளில் உருவாகி வருகிறது. 

ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்ட இந்தச் சிவலிங்கத்தின் உள்ளே, குகைக்குள் பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும், பல கடவுள்களின் சிற்ப வடிமைப்புடன் தறைத்தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சிவலிங்க சிலையும் மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடி கொண்டு இருப்பது போன்று அழகிய சிலையுடன் கட்டபட்டிருக்கும் சிலைக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்காட்டின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது தலைமையில் இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழை வழங்கினர். அறுபது பேர் சேர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த சிலைச் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தச் சிலை வருகின்ற மஹா சிவராத்திரி அன்று திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com