மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு
Published on

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோருக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் இயல்பான மனிதர்களே முறையாக கடைப்பிடிக்க முடிவதில்லை. இந்நிலையில், குழந்தை மனம் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் அதை பின்பற்றுவது என்பது இயலாத காரியம். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதலே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன.

இதன் பலனாக, சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் 753 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸூம், 513 பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மாற்று திறனாளி நல அமைப்பினர் மேற்கொண்ட முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமானது என்று அயனாவரம் மனநல காப்பகத்தின் இயக்குநர் பூர்ண சந்திரிகா தெரிவித்துள்ளார். இதே போல் BANYAN மற்றும் அன்பகத்தில் பராமரிக்கப்படுவோருக்கும் இரு டோஸ்கள் செலுத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் ஜான் வர்கீஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com