இந்தியாவிலேயே ஆணவக்கொலைக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று அரசு வழக்கறிஞர் சங்கர நாரயணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர நாராயணன், சட்டநகல் வந்தபின் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மேலும், ரூ.50 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
குற்றம்சாட்டவர்கள் சார்பில் பல முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட போதும் நீதிமன்றம் அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்ததும், மாவட்ட டிஎஸ்பியின் உறுதியான விசாரணையும் தான் இந்த தீர்ப்பு வருவதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.