கடலூரை பதறவைத்த சம்பவம்: ஒரே குடும்பத்தில் மூவர் கொலை.. வெட்டுப்பட்ட விரலே துப்பு துலக்க காரணம்?

கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் வெட்டுபட்ட விரல், துப்பு துலங்க காரணமாக இருந்திருக்கிறது. எப்படி உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர்?
கொலையானவர்கள்
கொலையானவர்கள்pt web
Published on

பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து ஆரம்பித்த விசாரணை 

காராமணிக்குப்பத்தில் ஐடி ஊழியர் சுகந்த குமார், தனது தாய் கமலேஸ்வரி, மகன் நிஷாந்த் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் இருந்து கடந்த 15 ஆம்தேதி புகை வந்ததோடு, துர்நாற்றம் வீசியதால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டின் அருகே குடியிருந்த சண்முகவேல் அளித்த இந்த தகவலின்பேரில், கடலூர் மாவட்ட ஒட்டுமொத்த காவல் துறையும் அங்கு குவிக்கப்பட்டது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மூன்று பேரும் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்தகறைகள் வீடு முழுவதும் இருந்தன. பக்கத்து வீட்டிலும் ரத்தக்கறை இருந்தது.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் கொலை நடந்த வீட்டிற்குள் சென்று அதன் பிறகு பல தெருக்களை சுற்றி ஒரு இடத்தில் நின்றது தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் இருந்து 700க்கும் மேற்பட்ட செல்போன் எண்களிலிருந்து மற்ற இடங்களுக்கு பேசப்பட்ட கால் டீட்டெயிலும் எடுக்கப்பட்டது ..

ஒரு கட்டத்தில் முதலில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் சண்முகவேல் குடும்பத்தின் மீது காவல்துறையின் சந்தேகப்பார்வை விழுந்தது. பக்கத்து வீட்டில் கொடூரக் கொலைகள் நடந்தபோது ஏன் அவர் சப்தம் கேட்கவில்லை என்று கூறினார்? இந்த ஒற்றைக்கேள்வியை கொண்டு சண்முகவேல் குடும்பத்தினரை 2 நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து கேள்விகளால் துளைத்தெடுத்தனர் காவலர்கள்.

கொலையானவர்கள்
போலிச் சான்றிதழ் விவகாரம் | பெண் IAS பூஜா கேட்கர் மீது வழக்குப்பதிவு.. கிடுகிடுக்கும் விசாரணை!

காட்டிக்கொடுத்த வெட்டுப்பட்ட விரல்

அதே சமயத்தில் கொலை நடந்த காராமணி குப்பத்தில் ஒவ்வொரு வீடாக சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள சங்கர் ஆனந்த் என்பவர் 15 ஆம் தேதியிலிருந்து தலை மறைவானது காவல்துறைக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. செல்போன் மூலம் சங்கர் ஆனந்த் இருக்கும் இடத்தை கண்டறிந்து சென்னை அருகே மறைமலைநகரில் அவரை காவல்துறை சுற்றி வளைத்தது. சங்கர் ஆனந்தின் ஒரு விரல் வெட்டப்பட்டு காயம் இருந்தது சந்தேகத்தை வலுவாக்கவே அவரை விசாரணை செய்தபோதுதான்அவர்தான் தனது நண்பருடன் சேர்ந்துகொலை செய்தது தெரியவந்தது.

21 வயதாகும் சங்கர் ஆனந்தும், 20 வயதாகும் ஷாகுல் ஹமீதும் நெருங்கிய நண்பர்கள். இன்ஸ்டாவில் அடிக்கடி ரீல்ஸ் செய்து பதிவிடும் இவர்கள்தான் இந்த கொடூரத்தை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு வீட்டின் கதவை தட்டி சுகந்தகுமார் வெளியே வந்தபோது கத்தியால் அவரை வெட்டியதாகவும் அவர் வீட்டுக்குள்ளே சென்றதால் உள்ளே சென்று தடுக்க வந்த அவரது தாய் கமலேஸ்வரியையும் சரமாரியாக வெட்டியதாகவும், தூங்கிக் கொண்டிருந்த நிஷாந்தையும் கழுத்தறுத்து கொன்றதாகவும் சங்கர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கொலையானவர்கள்
மழைக்கால கூட்டத்தொடர் | 6 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் மத்திய அரசு!

பகீர் பிண்ணனி

தனது நண்பர்களுடன் இதற்காக ஏற்கனவே திட்டமிட்டு அதை நிறைவேற்றியதாகவும் 14ஆம் தேதி இரவு ஷாகுல் ஹமீத் பெட்ரோல் வாங்கி வந்து கொடுத்ததாகவும் அதனை ஊற்றி உடல்களை எரித்ததாகவும் வாக்குமூலம் தந்திருக்கிறார் சங்கர் ஆனந்த். இந்த கொடூர கொலைகளுக்கு பின்னணியில் இருந்தது.... தன்னைப்பார்த்து கமலேஸ்வரி கூறிய கோபமான வார்த்தை என்று சங்கர் ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தனது தாயுடன் சுகந்தகுமார் தவறான தொடர்பு வைத்திருந்ததாக பேச்சுகள் பரவியிருந்த நிலையில், மனமுடைந்த சங்கர் ஆனந்தின் தாய் 8 மாதங்களுக்கு முன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று வாக்குமூலத்தில் சங்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தந்தை இல்லாத நிலையில், தாய் இறந்ததற்கு காரணமாக இருந்த சுகந்தகுமார் மீது சங்கரின் வன்மம் அதிகரித்தது. இந்த கோபத்தை அதிகரிக்கும் வகையில், சுகந்தகுமாரின் தாய் கமலேஸ்வரி, தன்னை பார்த்து அனாதை என்று திட்டியதால் அன்றிரவு ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் மற்றும் செல்போன், பீரோவில் இருந்த பணத்தை திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்துவிட்டு நிதானமாக அந்த வீட்டிலேயே அமர்ந்து மது அருந்தி மாடியில் படுத்து உறங்கிவிட்டதாகவும், 14 ஆம்தேதி இரவு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு 15 ஆம்தேதி காலை சங்கர் தலைமறைவாகியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் மட்டுமே 3 பேரையும் வெட்டிக்கொன்றதாக சங்கர் ஆனந்த் கூறும் நிலையில் வேறு யாருக்கும் கொலையில் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள். கொலை நடந்த வீட்டுக்குள் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்று காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

கொலையானவர்கள்
பில்கிஸ் பானு வழக்கு|ஜாமீன் கோரிய 2 பேரின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com