பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு? என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு? என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு? என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
Published on

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய விவகாரத்தில் தமிழகத்தில் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே ஒரு காரை வழிமறித்து போலீசார் விசாரித்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் அவர்களை கைது செய்தனர். மயிலாடுதுறையை சேர்ந்த சாதிக் பாஷா, ஜவஹர் அலி, முகமது ஆஷிக், முகமது இர்பான், ரஹ்மத் ஆகியோர் என்பது தெரியவந்தது. சாதிக் பாஷா கிளாபா பார்ட்டி ஆப் இந்தியா, ஐ.எஸ்.ஐ போன்ற அமைப்புகளை தொடங்கி பயங்கரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனைடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டு, மயிலாடுதுறையில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குபதிவு செய்தது.

இதன் அடிப்படையில் இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில் 16 டிஜிட்டல் ஆவணங்கள், 6 ஆயுதங்கள், மெட்டல் ராடு, இரண்டு தற்காப்பு கலைக்கருவி, கையால் எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அண்ணாசாலையில் சாதிக் பாஷா நடத்தி நிறுவனத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த வழக்கு குறித்து மேலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com