சேலம்
சேலம்முகநூல்

’இன்னும் உக்கிரமா இருக்கும்’ வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை.. சேலம் வாசிகளே! ஷாக் ஆகாதீங்க!!

இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலான வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கிறது சேலம். வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
Published on

இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலான வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கிறது சேலம். வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

கோடைக்கால தொடக்கத்திலேயே வெயில் சதம் அடித்த மாவட்டங்களில் ஒன்று சேலம். ஏப்ரல் 23 ஆம்தேதி, நாட்டிலேயே அதிக வெயில் பதிவான இடங்களில் 3 ஆவது இடம் பிடித்தது சேலம். இங்கு10 நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

இதனைத் தொடர்ந்து 23 ஆம்தேதி வெயிலின் அளவு 108 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. இதனால் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசியது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெயிலிலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை வாயிலாக தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

சேலம்
தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களுக்கு பயங்கர வார்னிங்.. வறுத்தெடுக்கப் போகும் வெயில்!!

இருப்பினும் வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள் என்ன செய்வது என்று கேள்வியை முன் வைக்கின்றனர் பொதுமக்கள். சேலத்தில் மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கையும் மக்கள் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பகலில் வெப்ப அலை இரவில் புழுக்கம் என மக்கள் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை சேலத்தில் நிலவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com