சென்னை - மசூலிப்பட்டினம் - இடத்தை தேர்வு செய்த ‘மிக்ஜாம்’ புயல்; வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததென்ன?

டிசம்பர் 4 ஆம் தேதி மாலை சென்னை - மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல்
புயல்pt web
Published on

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சாலைகளிலும் நீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

MichaungCyclone | WeatherUpdate | Cyclone
MichaungCyclone | WeatherUpdate | Cyclone

உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரப்போகிறது. வரும் 2 ஆம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3 ஆம் தேதி வங்கக்கடலிலேயே புயலாக வலுப்பெறும் என சொல்லப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னம் சென்னையிலிருந்து 800 கிமீ தொலைவில் புதுச்சேரியில் 790 கிமீ கிழக்கே மையம் கொண்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் ரீச் என்று மட்டும்தான் சொல்லி இருந்தனர். அதில் புயல் வடதமிழகம், தெற்கு ஆந்திரப்பகுதியை நோக்கி வரும் என சொல்லப்பட்டிருந்தது. இன்று cross எனும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். எந்த இடத்தில் சரியாக கடக்கப்போகிறது என்பது பற்றி சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் (தெற்கு ஆந்திரா) இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4 தேதி மாலை இந்த புயல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரப்புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com