ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை எண் 4475 உள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் டாஸ்மாக் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பாரில் டாஸ்மாக் கடை மூடும் இரவு ஒன்பது மணிக்கு பிறகும், காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவும் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இங்கு காலை நேரத்திலேயே பார் திறந்து இருப்பதால் மது குடிப்போர் வேலைக்குச் செல்லாமல் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மதுவை அருந்த பார் இருக்கும் பகுதியிலேயே இருந்து விடுவதால் அநேக குடும்பங்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுவிற்பனை செய்யும் நேரத்தை குறைந்துள்ளதாக பெயரளவுக்கு கணக்குக் காட்டி இதுபோன்ற இதுபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் பார்களை உடனடியாக மூட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.