காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை, இசைஞானி இளையராஜா தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அத்திவரதர், மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளார். அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை தரிசித்தார்.
அத்திவரதர் வைபவம் தொடங்கி 15ஆவது நாளான இன்று, அத்திவரதர், சிறப்பு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சி நகரில் குவிந் த வண்ணம் உள்ளனர். இதனால் பேருந்துகள், ஆம்புலன்ஸ், கழிவறைகள் என பக்தர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டி ருக்கின்றன.
இந்நிலையில், இசை அமைப்பாளர் இளையராஜா அத்திவரதரை தரிசிக்க இன்று அதிகாலையில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தார். அவரை வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், அத்திவரதரின் வரலாறு குறித்து இளையராஜாவிடம் எடுத்துக் கூறி, பிரசாதம் வழங்கினர்.