அந்நிய குளிர்பானங்களை புறக்கணியுங்கள் : வணிகர் சங்க தலைவர் வெள்ளையன்

அந்நிய குளிர்பானங்களை புறக்கணியுங்கள் : வணிகர் சங்க தலைவர் வெள்ளையன்
அந்நிய குளிர்பானங்களை புறக்கணியுங்கள் : வணிகர் சங்க தலைவர் வெள்ளையன்
Published on

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் கோக், பெப்சி உள்ளிட்ட அந்நிய நிறுவன தயாரிப்புகளை வணிகர்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோக், பெப்சி போன்ற அன்னிய நாட்டு குளிர்பானங்களின் விற்பனையை தடை செய்ய வேண்டுமென ஏராளமானோர் கோரிக்கை விடுத்த‌னர்‌. பின்பு தமிழகத்தில் அந்நிய குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்‌டது. ஆனால் இந்த ஆண்டு கோடைக்காலத்தை முன்னிட்டு அந்நி‌ய குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிகிறது‌. 

இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்திந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், அன்னிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தமிழகத்தில் உள்ளூர் வணிகர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார், மேலும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் கோக், பெப்சி ஆகி‌ய அந்நிய குளிர்பானங்களை வணிகர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்நிய குளிர்பானங்களுக்கு மாற்றாக ‌இளநீர்‌, பதநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் நாடவும் இது வழிவகைச் செய்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்‌. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com