"முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது" - மத்திய மண்டல ஐஜி ஜெயராம்

"முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது" - மத்திய மண்டல ஐஜி ஜெயராம்
"முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது" - மத்திய மண்டல ஐஜி ஜெயராம்
Published on

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி நடைபெற்றது. அதில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் பங்கேற்று யோகாசனங்களை ஆர்வத்துடன் செய்து காவலர்களை உற்சாகப்படுத்தினார்.

மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 122 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பயிற்சி நடந்துவருகிறது. இன்று நடந்த பயிற்சியில் தற்காப்புக் கலைகளான ஜூடோ, கராத்தே மற்றும் மனவலிமைக்கு யோகாசனம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை செய்து காட்டினார். கூடுதலாக உடற்பயிற்சிகளையும் செய்தார். அப்போது பேசிய அவர், "காவலர்கள் முக்கியமாக கீரை அதிலும் முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மைதா புரோட்டா சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்" என்றும் காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த தற்காப்புப் பயிற்சியில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com