18 வயதுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கே முழு பொறுப்பு! தண்டனையும் உண்டு!

ஸ்மார்ட் பாய்ஸாக வளர வேண்டிய துறுதுறு சிறுவர்கள், மோட்டர் சைக்கிள் பிரியர்களாக மாறி விபத்து ஏற்படுத்துகின்றனர். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீதான நடவடிக்கை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் இயக்கும் காட்சி
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் இயக்கும் காட்சிபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: சார்லஸ்

துறுதுறு துள்ளலுடன் சுற்றும் இரண்டும் கெட்டான் வயது சிறுவர்களைத்தான், பைக் விளம்பரங்கள் பெரிதும் ஆட்கொண்டு விடுகின்றன. அண்மைக் காலமாக வெளிவரும் அதிவேக பைக்குகள், சிறுவர்களை வசீகரித்து வாங்க வைக்க வைக்கும் வகையில் விளம்பரம் செய்யப்படுகிறது.

தேர்ச்சிபெற்ற விளம்பர மாடல்கள், அனைத்து வகை பாதுகாப்புடனும் பைக் ஓட்டும் காட்சியை பார்க்கும் சிறுவர்கள், அதை அப்படியே எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாலையில் செய்கிறார்கள். விபத்தில், அவர்களும் உயிரிழக்கிறார்கள். மற்றவர்கள் மரணத்திற்கோ அல்லது படுகாயத்திற்கோ காரணமாகின்றனர்

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் இயக்கும் காட்சி
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் இயக்கும் காட்சி

ஆனால், திருச்சியில், இருவர், மூவராக இருசக்கர வாகனத்தில் பறக்கின்றனர் பள்ளி மாணவர்கள். ஸ்கூட்டர் முதல் அதிவேக பைக் வரை இயக்கும் பள்ளி மாணவர்கள், அதை பள்ளிக்கு வெளியே நிறுத்திவிடுகின்றனர். சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என சட்டம் சொன்னாலும் பெற்றோரும் அதை மதிக்கவில்லை...

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் இயக்கும் காட்சி
திருச்சி: பள்ளி நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்

திருச்சி கண்டோன்மென்ட், பீமநகர், ஜங்ஷன் பகுதி பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் இரண்டு, மூன்று பேர் வரை பயணம் செய்வது தினம் நிகழ்கிறது. செல்போன் பேசியபடி இயக்கும் அலட்சியமும் நடக்கிறது.

எத்தனை சட்டங்கள் வந்தாலும், அதை சரியாக அமல்படுத்த வேண்டிய காவல்துறை தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கின்றனர் மக்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு கடமை முடித்துக்கொள்கிறது காவல்துறை என்பதும் குற்றச்சாட்டு. சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என சட்டம் சொல்கிறது. சிறுவர்கள் இயக்கும். வாகனம் மூலம் நடக்கும், கொலை நோக்கமற்ற மரணங்கள் எப்போது முடிவு வரும் என்பதே கேள்வி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com