ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 5பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகளிடம் ஆணையர் அவர்கள் விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய லூயிஸ் அமுதன், ‘ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.