எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
தேசிய கொடியை அவமதித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் விசாரணைக்காக எஸ்.வி சேகர் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி விளக்கமளித்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பேசிய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் "தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்யமாட்டோம்" என தெரிவித்தது.
எஸ்.வி.சேகர் மன்னிப்புகோரி செப்டம்பர் 2 ஆம் தேதி மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் அவரை அதுவரை கைது செய்யமாட்டோம் என காவல்துறை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.