மாணவி வளர்மதி படிக்க விரும்பினால் மீண்டும் வாய்ப்பு: பெரியார் பல்கலைக்கழகம்

மாணவி வளர்மதி படிக்க விரும்பினால் மீண்டும் வாய்ப்பு: பெரியார் பல்கலைக்கழகம்
மாணவி வளர்மதி படிக்க விரும்பினால் மீண்டும் வாய்ப்பு: பெரியார் பல்கலைக்கழகம்
Published on

மாணவி வளர்மதி படிக்க விரும்பினால் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என பதிவாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படித்து வந்த மாணவி வளர்மதி, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். 

இதனையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறை, வளர்மதி நக்சலைட்டுகளுடன் தொடர்பு கொண்டவர் என குற்றம் சாட்டியிருந்தது. அதன்படி கோவை உள்ள சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், மாணவி வளர்மதியை இடைநீக்கம் செய்து பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்தது. 

இந்தநிலையில், மாணவி வளர்மதி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது. வளர்மதியின் தந்தை மாதையன் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, உத்தரவு நகலை கொடுத்து வளர்மதி மீண்டும் படிக்கலாம் என பல்கலைக்கழக‌ பதிவாளர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com